உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோகர்ணம் கோவில் ஆடித்தேர் வெள்ளோட்டம்

திருக்கோகர்ணம் கோவில் ஆடித்தேர் வெள்ளோட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில், புதிதாக செய்யப்பட்ட ஆடித்தேர் வெள்ளோட்டம் நடந்தது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில், 35 ஆண்டுகளுக்கு பின், நாளை, ஆடித் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலுக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் பாகங்களும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் இரும்பு சக்கரங்களும் தயார் செய்து, புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சுப்ரமணியன், கலெக்டர் கணேஷ், எஸ்.பி., உமா, திருச்சி மண்டல ஹிந்து சமய அற நிலையத்துறை இணை இயக்குனர் கல்யாணி, உதவி ஆணையர் ஜெயப்பிரியா ஆகியோர், புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கருணாகரன், மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !