உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா

பொள்ளாச்சி :பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவிலில், ஆடிப்பூர உற்சவ விழா, 16ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி காலை, 9:30 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலிலிருந்து பால்குடங்கள் கொண்டு வந்து, 10:30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
அன்று மாலை, 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு, 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் ஜெயசெல்வம், பரம்பரை அறங்காவலர் மாணிக்கம் செய்து வருகின்றனர். சுதந்திர தின பொது விருந்து:பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், சுதந்திர தின பொது விருந்து நிகழ்ச்சி நாளை நடக்கிறது. சுதந்திர தினவிழாவையொட்டி, மாரியம்மன் கோவிலில் மதியம், 12:00 மணிக்கு சுதந்திர தின சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !