ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ADDED :3714 days ago
சென்னை:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும், 28ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு, அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, செப்., 19ம் தேதி, சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.ஆயினும், உள்ளூர் விடுமுறை நாளான, வரும், 28ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் செயல்படும்.இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.