உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீராம்பட்டினத்தில் இன்று தேரோட்டம்

வீராம்பட்டினத்தில் இன்று தேரோட்டம்

புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் இன்று (14ம் தேதி) நடக்கிறது. வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி பெரு விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், வீதியுலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா, இன்று (14ம் தேதி) நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் காலை 8:30 மணிக்கு, வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.
தேர் திருவிழாவையொட்டி, ரூரல் எஸ்.பி., தெய்வசிகாமணி தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.10 இடங்களில் சி.சி.டிவி., கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !