உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரிமலையில் களைகட்டியது ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் குவிந்தனர்!

சதுரகிரிமலையில் களைகட்டியது ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் குவிந்தனர்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_46291_145431474.jpgசதுரகிரிமலையில் களைகட்டியது ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் குவிந்தனர்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_46291_145438458.jpgசதுரகிரிமலையில் களைகட்டியது ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் குவிந்தனர்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_46291_145459571.jpgசதுரகிரிமலையில் களைகட்டியது ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் குவிந்தனர்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_46291_145507335.jpgசதுரகிரிமலையில் களைகட்டியது ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் குவிந்தனர்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_46291_145518346.jpgசதுரகிரிமலையில் களைகட்டியது ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் குவிந்தனர்!வத்திராயிருப்பு: பூலோக கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி மலையில், பிரசித்தி பெற்ற திருவிழாவான ஆடி அமாவாசை விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடந்தது. திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் மலையை முற்றுகையிட்டதால்  சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருக்க நேரிட்டது. கடந்த மே 17 ல் இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பக்தர்கள் உயிரிழப்பு சம்பவங்களுக்கு பின்  பக்தர்கள் மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது.மலைக்கு தினமும் பக்தர்கள் சென்று வந்த நிலை மாறி,  குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே செல்லமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.   தற்போது ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 11 நாட்கள் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்தனர்.   மலையை சுற்றியுள்ள வயல்வெளிகளிலும், தோப்புகளிலும் கூடாரங்கள் அமைத்து ஆடு, கோழிகள் பலியிட்டும், மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி, பலாஅடி கருப்பசாமிக்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அமாவாசை அபிஷேகம் துவங்கியது. 18 வகையான அபிஷேகங்கள் முடிந்தவுடன் திரைபோடப்பட்டு சுவாமிகளுக்கு அலங்காரங்கள் நடந்தன. மீண்டும்  6.45 மணிக்கு திரை விலக்கப்பட்டபோது சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கசுவாமி ராஜஅலங்காரத்திலும், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்பஅலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது நடந்த சிறப்பு ஆராதணைகளின்போது பக்தர்களின் "அரோகரா கோஷம் விண்ணை எட்டியது. பின்னர் சித்தர்களின் முறைப்படி சங்கொலி எழுப்பி பூஜைகள் செய்யப்பட்டன. சந்தனமகாலிங்கசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 18 சித்தர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான சாதுக்கள் பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். மலையில் கோயில் வளாகத்தில்  பூஜைநிகழ்வுகள், சிறப்பு வழிபாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும்,  மலையில் வனப்பகுதிக்குள் ஏற்பட்ட காட்டுத்தீயால் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.  தேனிமாவட்டத்தில் உள்ள வருஷநாடு உப்புத்துறை வழியாக மலைக்கு செல்லும் பாதையை ஒட்டிய வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை முன்தினம் ஏற்பட்ட காட்டுத்தீ, வேகமாக பரவியது. வனத்துறையினரும், பக்தர்களும் நீண்டநேரம் போராடி ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தனர். வெள்ளிக்கிழமை மீண்டும் தொடர்ந்து எரியத்துவங்கியது.   காற்று வேகமாக வீசியதால் மற்றொரு பகுதியிலும் தீ பரவியது. இதனால் அந்தப்பாதையில் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.  அவ்வழியாக செல்லவேண்டிய பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதேபோல விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறையிலிருந்து கோயிலுக்கு செல்லும் பிரதான பாதையிலும் பக்தர்கள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.  இரவு முழுவதும் பக்தர்கள் அடிவாரமான தாணிப்பாறையில் காத்திருந்தனர். அதிகாலை 2.30 மணிக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேங்கியதால் கடும்நெறிசல் ஏற்பட்டது.  நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் அங்கிருந்த தடுப்புகளை அகற்றி சிறிது தூரம் தள்ளி போட முயன்றனர்.  பக்தர்கள் அதற்குள் தடைகளை தாண்டிக்குதித்தும், தள்ளிவிட்டபடியும் மலையை நோக்கி ஓட்டம்பிடித்தனர். போலீசார் செய்வதறியாது நின்றனர்.  15 நிமிடங்களுக்குள் பெரும்பகுதி கூட்டம் மலைக்குள் சென்றுவிட்டதால் வேறுவழியின்றி போலீசார் மலைப்பாதையை திறந்து விட்டனர்.   மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம், தேனி, திருநெல்வேலி உட்பட பல்வேறு நகரங்களிலிருந்தும் அடிவாரமான தாணிப்பாறை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !