திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை!
ADDED :3678 days ago
திருப்பரங்குன்றம்: உலக நன்மை, திருமணமாகாத பெண்களுக்கு வரன் அமைய, மழை வேண்டியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை நடநத்து. கோயில் சார்பில் திருவாட்சி மண்டபத்தில் மூன்றரை அடி வெள்ளி விளக்கும், கம்பத்தடி, மடப்பள்ளி, ஆஸ்தான மண்டபம், உற்சவர் சன்னதிகளில் மூன்றரை அடி பித்தளை விளக்குகளும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டன. சிவாச்சார்யார்கள் கோயில் விளக்குகளில் தீபம் ஏற்றி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பெண் பக்தர்கள் குத்து விளக்குளில் தீபம் ஏற்றி பூஜைகள் செய்தனர்.