வரகவின் பெரிய கருப்பண்ணசுவாமி!
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகவி முத்துக்குட்டிப் புலவர் பெரிய கருப்பண்ண சுவாமியைப் பற்றி கீழ்க்கண்டவாறு பாடுகிறார்.
திரும்பும் திசைக்கெல்லாம் வந்துமுன் நிற்பாய்
தியானிக்க வந்துதவுவாய்
சில்லறைப் பயமிகு வழிக்கு வழிவிடு துணைச்
சேவகனுமாக வருவாய்
கரும்பும் தெவிட்டாத கனியுமென ரசம் ஒழுகும்
கவிசொல்ல வந்து கேட்பாய்
கவிசொன்ன பேர் கேட்ட வரமும் கொடுப்பாய் நீ
கண் கண்ட தெய்வம் அய்யா
விரும்பும் தவம் பெற்ற காமாட்சி அம்மன் முதல்
வீரபத்திரன், முன்னோடி,
மெய்ச்சமயன், அரசு, முனி, சோனை, இருளன், காளி
வெம்பேச்சி, ராக்காமியாளும்
பெரும் பந்தி சூழும் உயர்சாலை தனில் ஆலயம்
பெற வீற்றிருந்த துரையே!
பெரும் அலற் புனல்வாவி திகழ்பவுசை பதிமேவு!
பெரிய கருப்பண்ண சுவாமியே
தேறாத கலி என்பது அணுகாமல் உலகம்
செழிக்க மழைமாரி பொழியச்
செகதலம் தழைய மறை அந்தணர்கள் வாழமிகு
தெய்வ சன்னதி விளங்க
வீறாக மதயானை நிறைகண்ட வணிசேகர்
மேருவை உரைத்து அறிந்தோர்
மிக்க தெய்வங்கள் குரு. தாய் தந்தை அல்லாமல்
வேந்தரைக் கும்பிடாதோர்
மாறாகப் புகழ்பெற்ற எழுநகர் மரபுள்ள
வணிகர் நகரப் ரதாபர்
வண்குடிகளாக நின்குடியென்று கொண்டாடி
மைந்தரோடு வாழ்வு பெற்றுப்
பேறான செல்வம் தழைக்க நின் கருணை அருள்
பெருகு சன்னதி வாழியே
பெருகும் அலற் புனல்வாவி திகழ்பனசைப் பதிமேவு
பெரிய கருப்பண்ண சுவாமியே.
மேற்கண்ட பாடல் மூலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்தே நம் நகரத்தார்கள் பெரிய கருப்பண்ண சுவாமியை வணங்கி வந்துள்ளனர் என்றும், கருப்பரை வணங்குவதால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டுக் கூறுகிறார்.