புஷ்ப பல்லக்கில் நாகம்மன் வீதியுலா!
                              ADDED :3728 days ago 
                            
                          
                           கடலூர்: கடலூர் நாகம்மன் கோவிலில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற நாகம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தீபாராதனை, வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது. இரவு புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.