ஏழைமாரியம்மன் கோவிலில் ஆடிமாத திருவிளக்கு பூஜை
ADDED :3738 days ago
விழுப்புரம் : விழுப்புரம் ராஜகோபால் தெருவில் உள்ள ஜனகாபுரி ஏழைமாரியம்மன் கோவிலில் ஆடிமாத விளக்கு பூஜை நடந்தது.விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலும், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி, அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து, இன்று காலை 6:00 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பிற்பகலில், கரகம் எடுத்து மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர், இரவு 7:00 மணிக்கு கும்பப் படையல் மற்றும் இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சிவசக்தி கோபு செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கோபிநாத் செய்திருந்தார்.