பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் பவித்ர உற்சவம் நிறைவு!
ADDED :3742 days ago
காஞ்சிபுரம்: அச்சிறுபாக்கம் அடுத்த, ஒரத்தி பகுதியில் உள்ள, பிரசன்ன வரதராஜ சுவாமி கோவிலில், பவித்ர உற்சவம் நடைபெற்றது. ஒரத்தி பகுதியில் உள்ள, பிரசன்ன வரதராஜ சுவாமி கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை பவித்ர உற்சவம் துவங்கியது. அன்று, மாலை 5:00 மணிய ளவில், சிறப்பு பூஜையும் வேத பாராயணம் முதல்கால ஹோமம் நடைபெற்றது. 15ம் தேதி, காலை 8:00 மணி முதல், 11:௦௦ மணி வரை, இரண்டாவது கால ஹோமம் மற்றும் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7:00 மணி முதல், 9:00 மணி வரை மூன்றாவது கால ÷ ஹாமம் பூர்ணாஹூதி நடைபெற்றது. நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.