உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் மாரியம்மன் கோவிலில் தேர் விழா!

திருக்கோவிலூர் மாரியம்மன் கோவிலில் தேர் விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வி.புத்துõர் மாரியம்மன் கோவிலில் தேர், தீமிதி விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த வி.புத்துõர்  மாரியம்மன் கோவில் கடந்த 8ம் தேதி பிரம்மோத்ஸவ விழா துவங்கியது. இதன் முக்கிய நிகழ்சியாக நேற்று தேர், தீமிதி விழா நடந்தது. காலை 8:00  மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பகல் 11.00 மணிக்கு, அம்மனுக்கு பால்குட அபி ஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பி டித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  விழாவிற்கான  ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !