உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று.. எதிரி தொல்லை நீங்கும் கருடஜெயந்தி!

இன்று.. எதிரி தொல்லை நீங்கும் கருடஜெயந்தி!

ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று கருடஜெயந்தி (பிறந்த நாள்) கொண்டாடப்படுகிறது. கஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்தவர் கருடன். பறவைகளின் அரசனான கருடனுக்கு ‘பட்சி ராஜன்’ என்று சிறப்பு பெயர் உண்டு. வினதையின் மகன் என்பதால் ‘வைநதேயன்’ என்றும் இவரை அழைப்பர். கருட ஜெயந்தியன்று இவரை வழிபட எதிரி தொல்லை நீங்கும். பெண்கள் கருடாழ்வார் சந்நிதியில் தீபமேற்றி வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். விவசாயிகள் விஷபயம் நீங்க இவரை வணங்கி பணிக்கு புறப்படலாம்.

இந்த நாள் நல்லநாள்: கருடனைத் தரிசித்தால் கிழமைக்கொரு சிறப்பு பலன் உண்டு.

ஞாயிறு - நோய், மனக்குழப்பம், பாவம் நீங்குதல்
திங்கள் - குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சி ஏற்படுதல்
செவ்வாய் - தைரியம் ஏற்படுதல், சிக்கலான பிரச்னை தீர்தல்
புதன் - எதிரிபயம் நீங்குதல், நல்லோர் உதவி கிடைத்தல்
வியாழன் - நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படுதல்
வெள்ளி - செல்வம் பெருகுதல்
சனி - திருமாலின் அருள் கிடைத்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !