உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஷ்யம் நகர் முருகன் கோவிலில் ஆக., 21ல் கும்பாபிஷேகம்!

பாஷ்யம் நகர் முருகன் கோவிலில் ஆக., 21ல் கும்பாபிஷேகம்!

பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் அருகிலுள்ள பாஷ்யம் நகர் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில், தாய், தந்தையுடன் இணைந்து, சோமாஸ்கந்த ரூபமாக அருள் பாலித்து வரும் முருகனுக்கு, வரும், 21ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. சிறப்பு ஹோமம்:முதல் நாளான நேற்று காலை, தேவ அனுக்ஞை, கணபதி பூஜை, கணபதி ஹோமம்; மாலையில், வாஸ்து பூஜை, மகா மங்களாரத்திக்கு பின், பிரவேச பலி நடந்தது. இரண்டாம் நாளான இன்று காலை, லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, ம்ருத்சங்கிரணம்; மாலையில், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலார்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, திரவ்யாஹூதி பூர்ணாஹூதி; இரவு, 8:30 மணிக்கு மகா மங்களாரத்தி.

யாக கலசம் புறப்பாடு:
நாளை காலை, விசேஷ சந்தி கோ பூஜை, யாகசாலை பிரவேசம், இரண்டாவது கால யாக பூஜை, பூர்ணாஹூதி; மாலையில், விசேஷ சந்தி, மூன்றாவது கால யாக பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை, சுஹாசினி பூஜை, பிர்மசாரி பூஜை, கன்னியா பூஜை, திவ்யாஹூதி; இரவு, பூர்ணாஹூதி.வரும், 21ம் தேதி காலை, நான்காவது கால யாக பூஜை, ஸ்பர்சாகுதி, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், யாக கலசம் புறப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் மற்றும் கணபதி, துர்க்கை, சோமாஸ்கந்த மூர்த்திகளான சிவன், -பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம், பைரவருக்கு மகா கும்பாபிஷேகம். பகல், 11:30 மணிக்கு மேல், சுவாமி தரிசனம்; மாலையில், நன்கொடை வழங்கியவர்கள், உபயதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவில், சுவாமி வீதி உலா நடக்கிறது.மண்டலாபிஷேகம்யாக பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை, பிச்சுமணி சிவாச்சாரியார் நடத்துகிறார். பூஜைகளை, கோவில் அர்ச்சகர் ரமணி சிவாச்சாரியார் தலைமையில், அய்யப்ப சிவாச்சாரியார், நடராஜ சிவம், அஸ்வத்தாம சிவம் செய்கின்றனர்.வரும், 22ம் தேதியிலிருந்து, அக்., 8ம் தேதி வரை, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்கிறது. காலையில் அபிஷேகமும், மாலையில் சிறப்பு பூஜையும் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !