உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா!

காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா!

காஞ்சிபுரம்: ஆலடிபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆகாய கன்னியம்மன் கோவிலில், ஆடி திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம், நாராயணபாளையம் தெருவாசிகள் சார்பில், ஆலடிபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆகாய கன்னியம்மன் கோவிலில், ஆடி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்று, காலை 9:00 மணியளவில், அம்மன் கலசம் புறப்பாடும், பிற்பகல் 1:00 மணியளவில் கூழ்வார்த்தல், மாலை 4:00 மணியளவில், ஊரணி பொங்கல் வைத்து அப்பகுதி பெண்கள் அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம், இரவு 9:30 மணியளவில், ஆகாய கன்னியம்மன் மலர் அலங்காரத்தில் ஊர்வலமாக, நாராயணபாளையம் தெரு, சிங்கப்பெருமாள் கோவில் தெரு, கோட்ராம்பாளையம் தெரு போன்ற பகுதிகளில் சுற்றி வந்து அருள்பாலித்தார். இரவு 12:00 மணியளவில், அம்மன் கோவிலை சென்றடைந்தது. பின்னர், கும்பம் இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !