ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், மகா கும்பாபிேஷக விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி சுபமுகூர்த்த கால் போடுதல், முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பிரசன்ன கணபதி ேஹாமம், துர்கா ேஹாமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும்; மாலை, 4:30 மணிக்கு வாஞ்ச கல்ப கணபதி பூஜை, வாஸ்து ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு அஸ்வ பூஜை, கஜபூஜை, முளைப்பாரி ஊர்வலம் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு யாக சாலை பிரவேசம், முதற்கால யாகம் ஆரம்பம், மாலை, 6:00 மணிக்கு சுவாமி விக்ரஹங்களுக்கு ஆதிவாச கிரியைகள், சயனாதி வாசம் உள்ளிட்ட பூஜையும்; இரவு, 9:00 மணிக்கு முதற்கால யாக நிறைவு, பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.
வரும், 21ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு நான்காம் கால யாகம், காலை, 5:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, காலை, 5:30 மணிக்கு யாத்ராதானம், கடங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும்; காலை, 7:30 மணிக்கு சவுடேஸ்வரி தாயார் மூலாலய கோபுரம், ராமலிங்கேஸ்வரர், காயத்ரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷக விழா, தச தரிசனம், தீபாராதனையும்; காலை, 8:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மகாபி ேஷகம், சர்வாலங்கார திருக்கல்யாணம் நடைபெறுகிறது.