உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளலுார் காளியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா

வெள்ளலுார் காளியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா

கோவை: வெள்ளலுார் காளியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, வரும் 21ல் நடக்கிறது.கோவை வெள்ளலுாரில், பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர், முருகனுக்கு, தனித்தனி சன்னதிகள் அமைத்து, திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேகம், வரும் 21ம் தேதி, காலை 6:30 மணியிலிருந்து 7:30க்குள் நடக்கிறது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !