மகா சக்தி மாரியம்மன், சித்தி விநாயகர் கோவில்களில் கும்பாபிேஷக விழா
உடுமலை:உடுமலை அருகே, வாகத்தொழுவு மகா சக்தி மாரியம்மன் கோவில் மற்றும் கணியூர், ஸ்ரீராமபட்டிணம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா, இன்று துவங்குகிறது. உடுமலை, வாகத்தொழுவு, கொசவம்பாளையத்தில் அமைந்துள்ளது, மகா சக்தி மாரியம்மன் கோவில். இக்கோவில் வளாகத்தில், விநாயகர், முருகர், கருப்பண்ணசாமி, கன்னிமார் சன்னதிகள் உள்ளன. கோவில் திருப்பணி முடிந்து, கும்பாபி ேஷகம் ஆக., 21ல் நடக்கிறது. இதற்கான விழா, இன்று மாலை, 5:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. மாலை, 6:00 மணி முதல், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணி முதல், விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், வேதபாராயணம், இரண்டாம்கால யாக வேள்வி நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு மூன்றாம்கால யாக வேள்வியும், இரவு, 8:00 முதல், 9:00 மணி வரை, யந்திரஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடக்கிறது. ஆக., 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை. நான்காம்கால யாக வேள்வி, வேதபாராயணம், தீபாராதனை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, விமானத்துக்கும், காலை, 9:15 மணிக்கு, விநாயகர், மகாசக்தி மாரியம்மன், முருகன், கன்னிமார் மற்றும் கருப்பண்ணசாமி தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.
சித்தி விநாயர்க கோவில்: மடத்துக்குளம், கணியூர், ஸ்ரீராமபட்டிணத்தில் அமைந்துள்ள, சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. மாலை, 6:15 மணி முதல், வாஸ்து பூஜை, முளைப்பாரி பூஜை, காப்பு கட்டுதல், கும்பஸ்தாபனம், முதற்கால வேள்வி, வேதபாராயணம், தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, 5:30 மணிக்கு, வேதிகார்ச்சனை, கணபதி யாகம், கணபதி மூலமந்தரயாகம், நாடி சந்தானம், தீபாராதனை நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு, சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, தசதானம், தசதரிசனம், அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.