உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்திர கோவில் கும்பாபிஷேகம்

வீரபத்திர கோவில் கும்பாபிஷேகம்

காரிமங்கலம்: காரிமங்கலம், வீரபத்திர ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஆக., 21) நடக்கிறது. விழாவையொட்டி இன்று, காலை, 9 மணிக்கு ஸ்வாமி புறப்பாடும், இரவு, 7 மணிக்கு கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக ஹோமம், 10 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ஸ்வாமி கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை காலை, 4 மணிக்கு கணபதி ஹோமம், வீரபத்ர ஹோமம், மஹாபூர்ணாகுதி, 5 மணிக்கு கும்பாபிஷேம் நடக்கிறது. சிவசுப்பிரமணிய ஸ்வாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். 6 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, குருபூஜை, பிரசாதம் வழங்குதலும், 10 மணிக்கு அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !