முனீஸ்வரர் கோவில் ஆடி மாத உற்சவம்
ADDED :3756 days ago
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டத்தில், நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் ஆடிமாத விழா நடந்தது. ஆடி ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆடி கடைசி வார விழாவை முன்னிட்டு, பக்தர்கள் புதுக்கோட்டை சாந்தனாத ஸ்வாமி கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து கோட்டை வாசலில், ஒன்பது அடி உயரத்தில் கம்பீரமாக காட்சிதரும் பொற்பனை முனீஸ்வரருக்கு, 18 வகையான மூலிகை அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதிகாலை முதல், மாவட்ட முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.