உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூலை 22ல் திருப்பரங்குன்றம் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஜூலை 22ல் திருப்பரங்குன்றம் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 22ல் மண்டலாபிஷேகம் நிறைவை முன்னிட்டு, நாளை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. கோயிலில் ஜூன் 6ல் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேகம் துவக்கமாக, ஜூன் 7முதல் மாலை யாகசாலை பூஜை மடிந்து, சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு 1008 கலசங்கள், சத்தியகிரீஸ்வரருக்கு 108 சங்குகள், கோவர்த்தனாம்பிகைக்கு 108 கலசங்கள், விநாயகர், துர்க்கைக்கு தலா ஒன்பது கலசங்கள், தங்க குடம், ஐந்து வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. ஜூலை 21 காலையில் இரண்டாம்கால யாகசாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜைகளும், ஜூலை 22ல் அதிகாலை நான்காம்கால யாகசாலை பூஜைகள் முடிந்து, புனிதநீர் மூலம் சுவாமிகள், அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !