நல்லமுத்தான் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்!
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரிக்கரை வெய்யலுார் நல்லமுத்தான் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு 10.00 மணிக்கு மகா பூர்ணாகுதியுடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று (21ம் தேதி) காலை 7.00 மணிக்கு வேதிகா அர்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. 9:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை ,மகா பூர்ணாகுதி தீபாராதணை நடந்தது. 9:40 மணிக்கு யாத்ரா தானம், கடம் புரப்பாடாகி 10.00 மணிக்கு விமான கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் 10:15 மணிக்கு மூலவர் நல்லமுத்தான் பிள்ளையார், பரிவார தெய்வங்களான பால சுப்ரமணியர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் சுற்றியுள்ள கிராமங்கள் வெளியூரிலிருந்து 2000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.