உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி அலங்கார மாதா சர்ச் தேர்ப் பவனி விழா

பரமக்குடி அலங்கார மாதா சர்ச் தேர்ப் பவனி விழா

பரமக்குடி: பரமக்குடி புனித அலங்காரமாதா அன்னை சர்ச் தேர்பவனி விழா நடந்தது. சிவகங்கை மறை பணி மைய இயக்குநர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். பரமக்குடி பங்குத்தந்தை செபஸ்தியான் வரவேற்றார். எஸ்.எம்.எஸ்.எஸ்., சுரேஷ், ஜோஸ்வா, ராம்நகர் சேசுராஜா, சூசைமைக்கேல், ஆல்பர்ட், ராஜா, திருவரங்கம் இருதயராஜ் கலந்து கொண்டனர். அலங்கார அன்னை மின்அலங்கார தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தேர்பவனியை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. உதவி பங்குத்தந்தை பிரேம் ஆனந்த் நன்றி கூறினார். பங்கு மக்கள், பங்குப் பேரவையினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !