உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேப்பமரத்தில் பால் .. மக்கள் அம்மனாக நினைத்து வழிபாடு!

வேப்பமரத்தில் பால் .. மக்கள் அம்மனாக நினைத்து வழிபாடு!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால், கிராம மக்கள் அம்மனாக நினைத்து வழிபாடு செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூர் மந்தக்கரையில் வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தில் நேற்று அதிகாலை முதல் பால் வடிய துவங்கியது. இதையறிந்த அப்பகுதி பெண்கள், வேப்பமரத்திற்கு ஆடை உடுத்தி, மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது அங்கு  சில பெண்களுக்கு மருள் வந்து ஆடிய போது, சேத்தூரிலிருந்து நாகாத்தம்மன், இந்த மரத்தில் குடியேறியதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் காலை, மாலை வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !