திரபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3796 days ago
மரக்காணம்: ஆலத்தூரில் திரபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்ச விழா நடந்தது. மரக்காணம் ஒன்றியம், ஆலத்தூர் கிராமத்தில் திரபதிய ம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 19ம் தேதி காலை 10:00 மணியளவில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது .தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, இரவு மின்விளக்கு அலங்காரத்தில் வாண வேடிக்கையுடன், வீதியுலா நடந்தது. நேற்று 26ம் தேதி, கோவில் வளாகத்தில் திரபதியம் மனுக்கும் அர்சுனருக்கும் திருமணவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் ராஜசேகர், திருநாவுக்கரசு, ஜனார்த்தனன், மரு தவானன் செய்திருந்தனர்.