உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கொளி பெருமாள் கோவில் புதிய தேர் நாளை வெள்ளோட்டம்!

விளக்கொளி பெருமாள் கோவில் புதிய தேர் நாளை வெள்ளோட்டம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம், நாளை, நடைபெறுகிறது. காஞ்சிபுரம்  விளக்கொளி பெரு மாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி  வருகிறது. இக் கோவில் வளாகத்தில் உள்ள துாப்புல் வேதாந்த தேசிகன் கோவில்   உற்சவத்திற்காக,  25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி,  கடந்த ஆண்டு துவங்கியது. அனைத்து பணிகளும்  முடிந்து, நாளை,  வெள்ளிக்கிழமை  அதற்கான வெள்ளோட்டம் நடைபெறுகிறது. நாளை, காலை 6:00  மணியளவில், விளக்கொளி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி சின்ன காஞ்சிபுரம்,  டி.கே. நம்பி தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளை சுற்றி வருவார்.  இந்த தேர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் பங்களிப்பில்  செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் நிர்வாக அலுவலர் ஒருவர்  கூறுகையில், “ஏற்கனவே இருந்த தேர் பழுதாகி விட்டது. அதனால் புதிய தேர்  செய்ய முடிவு செய்யப்பட்டு வெளியிடத்தில் செய்து அங்கிருந்து கொண்டு வந்து  இங்கு பொருத்தப்பட்டுள்ளது. அதற்கான  வெள்ளோட்டம் நாளை நடைபெறுகிறது,”  என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !