உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

1. யஸ்மிந் ஏதத் விபாதம் யத: இதம்அபவத் யேந ச இதம் ய ஏதத்யோ அஸ்மாத் உத்தீர்ண ரூப: கலுஸகலம் இதம் பாஸிதம் யஸ்ய பாஸாய: வாசாம் தூர தூரே புந: அபிமநஸாம் யஸ்ய தேவா முநீந்த்ரா:நோ வித்யு: தத்வ ரூபம் கிமு புந:அபரே க்ருஷ்ண தஸ்மை நமஸ்தேபொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகம் உன்னிடம் இருந்து தோன்றியே விளங்குகின்றது; உன்னாலேயே ப்ரகாசம் பெறுகின்றது. உன்னிடமே சென்று ஒடுங்குகின்றது; நீயே இந்த உலகமாகத் தோன்றுகின்றாய்; உலகில் உள்ள அனைத்தும் நீயே ஆக உள்ளாய். உனது ஒளியால் உலகம் ப்ரகாசம் அடைகின்றது. நீ சொல்லுக்கும் மனதிற்கும் எட்டாத தூரமாக உள்ளாய். உனது உண்மையான ஸ்வரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் கூட அறியவில்லை. மற்றவர்கள் எப்படி அறிய இயலும்? இப்படிப்பட்ட க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனக்கு என் வணக்கங்கள்.2. ஜந்ம அதோ கர்ம நாம ஸ்புடம் இஹகுண தோஷ ஆதிகம் வா ந யஸ்மிந்லோகாநாம் ஊதயே ய: ஸ்வயம்அநுபஜதே தாநி மாயா அநுஸாரீபிப்ரத் சக்தீ: அரூப: அபி சபஹுதர ரூபா: விபாதி அத்புத ஆத்மாதஸ்மை கைவல்ய தாம்நே பர ரஸபரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தேபொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனக்கு பிறப்பு, கர்மம், முக்குணங்கள் (ஸத்வ, ரஜோ, தாமஸ்), குற்றங்கள் (தோஷம்), பெயர் பேதங்கள் ஆகிய எதுவும் கிடையாது. ஆனால் இந்த உலகைக் காக்க எண்ணி மாயையை அனுசரித்து அதனால் இவையனைத்தையும் நீயாகவே ஏற்றுக் கொள்கிறாய் அல்லவா? பல சக்திகளைக் கொண்டு பலவிதமான அவதாரங்களை உடையவனாகப் ப்ரகாசிக்கின்றாய். ஆனால் உண்மையில் உனக்கு உருவம் இல்லை. நீயே மோட்சத்தையும், பேரானந்தத்தையும் அளிப்பவன். இப்படிப்பட்ட விஷ்ணுவே! உனக்கு என் வணக்கங்கள்.3. தோ திர்யஞ்சம் ந மர்த்யம் ந சஸுரம் அஸுரம் நஸ்த்ரியம் நோ புமாம்ஸம்ந த்ரவ்யம் கர்ம ஜாதிம் குணம் அபிஸத் அஸத் வா அபி தே ரூபம் ஆஹு:சிஷ்டம் யத் ஸ்யாத் நிஷேத ஸதிநிகம சதை: லக்ஷணா வ்ருத்தித: தத்க்ருச்ரேண ஆவேத்யமாநம் பரமஸுகமயம் பாதி தஸ்மை நமஸ்தேபொருள்: குருவாயூரப்பா! ஞானிகள் உனது உருவத்தை எப்படிக் கூறுகிறார்கள் - உனது உருவம் விலங்கு, பறவை அல்ல; மனிதன் அல்ல; தேவர்கள் அல்ல; அசுரன் அல்ல; பெண் அல்ல; ஆண் அல்ல; பொருள் அல்ல; செயல் அல்ல; ஜாதி, குணம் அல்ல; உள்ளதாகவும் அல்ல; இல்லாததாகவும் அல்ல என்று தள்ளப்பட்டவுடன், எஞ்சி நிற்கும் ஒரு பொருள் மட்டுமே உள்ளது. அந்தப் பொருள் பரமானந்தம் அளிப்பதாகவும், ப்ரகாசத்துடன் உள்ளதாகவும் இருக்கிறது. இப்படியாக அல்லவா நூற்றுக்கணக்கான வேத வரிகளின் மூலம் உனது உருவம் புலப்படுகிறது. அத்தகைய உருவம் உடைய உனக்கு வணக்கம்.4. மாயாயாம் பிம் பித: த்வம் ஸ்ருஜஸிமஹத் அஹங்கார தந்மாத்ர பேதை:பூத க்ராம இந்த்ரிய ஆத்யை: அபி ஸகலஜகத் ஸ்வப்ந ஸங்கல்ப கல்பம்பூய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட இவபதாநி ஆத்மநா கால சக்த்யாகம்பீரே ஜாயமாநே தமஸி விதிமிர:பாஸி தஸ்மை நமஸ்தேபொருள்: குருவாயூரப்பா! நீ மாயையின் பிம்பமாகத் தோன்றுகிறாய். மஹத், அஹங்காரம், தன்மாத்திரை, பஞ்சபூதங்கள், பத்து இந்த்ரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு கனவிற்கும் நிஜத்திற்கும் ஒப்பான உலகத்தையும் உலகில் உள்ள அனைத்தையும் உருவாக்குகின்றாய். ஆனை*(ஆமை) தன் ஓட்டின் உள்ளே கால்களை இழுத்துக் கொள்வது போன்று, அனைத்து உலகங்களையும் (ப்ரளயத்தின் போது) காலம் என்று சக்தி கொண்டு உன்னுள் இழுத்துக் கொள்கிறாய். இதனால் எங்கும் ஆழமான இருள் நிறையும்போது, அந்த இருளால் பீடிக்கப்படாமல், தானாகவே ஒளி வீசுகிறாய். அப்படிப்பட்ட உனக்கு வணக்கம்.5. சப்த ப்ரஹ்ம இதி கர்ம இதி அணு:இதி பகவந் கால இதி ஆலபந்தித்வாம் ஏகம் விச்வ ஹேதும்ஸகலமயதயா ஸர்வதா கல்ப்யமாநம்வேத அந்தை: யத் து கீதம் புருஷபரசித் ஆத்மா அபிதம் ததது தத்வம்ப்ரேக்ஷா மாத்ரேண மூல ப்ரக்ருதி விக்ருதிக்ருத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தேபொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை உலகிற்கு காரணமான சப்தப்ரஹ்மம் என்றும், கர்மா என்றும், அணு என்றும், காலம் என்றும் கூறுகின்றனர். நீ அனைத்துமாக உள்ளதால் இப்படியாகக் கூறுகின்றனர். வேதங்கள் உன்னைப் புருஷன் என்றும், பரம் என்றும் சித் என்றும், ஆத்மா என்றும் கூறுகின்றன. இப்படிப் பட்ட தத்துவமான நீ உனது பார்வை மூலமே மாயையை வழி நடத்துகிறாய். இதன் மூலமே மூலப்ரக்ருதியும் அதன் மாற்றங்களும் உண்டாகின்றன. இப்படிப்பட்ட உனக்கு என் வணக்கம்.6. ஸத்வேந அஸத்தயா வா ந ச கலுஸதஸத் வேந நிர்வாச்ய ரூபாதத்தே யா அஸௌ அவித்யா குண பணிமதிவத் விச்வ த்ருச்ய அவபாஸம்வித்யாத்வம் ஸா ஏவ யாதா ச்ருதி வசநலவை: யத் க்ருபா ஸ்யந்த லாபேஸம்ஸார அரண்ய ஸத்ய: த்ருடநபரசுதாம் ஏதி தஸ்மை நமஸ்தேபொருள்: குருவாயூரப்பா! அவித்யா என்பது ஸத் (உள்ளது) என்றோ, அஸத் (இல்லாதது) என்றோ கூறமுடியாத நிலை அல்லது மனக்குழப்பம் ஆகும் அத்தகைய மாயை, கயிறானது பாம்பு என்ற எண்ணம் உண்டாக்குவது போன்று, இந்த உலகில் உள்ள பல பொருட்களையும் தோன்ற வைக்கிறது. (உண்மை எது பொய் எது என்று உணரமுடியாத நிலை). ஆனால் உனது அருள் பார்வை கிடைக்கப் பெற்றால், அந்த அவித்யை என்பது வித்யையாக மாறி விடுகிறது. அப்போது அது ஸம்ஸாரம் என்ற பெரும் காட்டை அழிக்கும் கோடரியாக மாறுகிறது. இப்படிப்பட்ட உனக்கு வணக்கம்.7. பூஷாஸு ஸ்வர்ணவத் வா ஜகதி கடசராவ ஆதிகே ம்ருத்திகாவத்தத்வே ஸஞ்சிந்த்யமாநே ஸ்புரதி தத்அதுநா அபி அத்விதீயம் வபு: தேஸ்வப்ந த்ரஷ்டு: ப்ரபோதே திமிரலயவிதௌ ஜீர்ண ரஜ்ஜோ: ச யத்வத் வித்யா லாபே ததா ஏவ ஸ்புடம் அபிவிகஸேத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தேபொருள்: குருவாயூரப்பா! க்ருஷ்ணா! நன்றாக ஆலோசித்துச் சிந்தித்தால் உனது ஈடு இணையில்லாத ஸ்வரூபமே உலகில் உள்ள அனைத்திற்கும் காரணமாக உள்ளது. இது நகைகளுக்குத் தங்கம் உள்ளது போன்றும், பானை முதலானவற்றில் மண் உள்ளது போன்றும் இருக்கிறது. கனவில் கண்ட பொருள்கள் விழித்துக் கொண்டவுடன் மறைவது போன்று, இருளில் கயிறு பாம்பாகத் தோன்றி வெளிச்சம் வந்தவுடன் கயிறாக உள்ளதோ அது போன்று, ஞானம் உண்டான பின் உனது ஸ்வரூபம் தெளிவாகப் புலப்படுகிறது. இப்படிப்பட்ட உனக்கு என் வணக்கம்.8. யத் பீத்யா உதேதி ஸுர்ய: தஹதி சதஹந: வாதி வாயு: ததா அந்யேயத் பீதா: பத்மஜ ஆத்யா: புந: உசிதபலீந் ஆஹரந்தே அநுகாலம்யேந ஏவ ஆரோ பிதா: ப்ராங்நிஜபதம் அபி தே ச்யாவிதார: ச பச்சாத்தஸ்மை விச்வம் நியந்தரே வயம்அபி பவதே க்ருஷ்ண குர்ம: ப்ராணாமம்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னிடம் பயந்து கொண்டு சூரியன் சரியாக உதிக்கிறான்; நெருப்பு எரிக்கின்றது; காற்று வீசுகிறது; ப்ரும்மா முதலான தேவர்கள் வணக்கம் செய்கின்றனர்; உனக்கு உரிய பலிபாகத்தை அளிக்கின்றனர். தேவர்களை நீ படைப்பின் தொடக்கத்தில் முன்னே நிறுத்தினாய். ப்ரளயம் உண்டானபோது கீழே இறங்குகிறாய். அனைத்து உலகங்களையும் ஆட்சி செய்கிறாய். இப்படியான உன்னை நாங்கள் வணங்குகிறோம்.9. த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுணமயம்இதம் த்ரி அக்ஷரஸ்ய ஏக வாச்யம்த்ரி ஈசாநாம் ஐக்யரூபம் த்ரிபி: அபிநிகமை: கீயமாந ஸ்வரூபம்திஸ்ர: அவஸ்தா: விதந்தம் த்ரியுக ஜநிஜுஷம் த்ரி க்ரம ஆக்ராந்த விச்வம்த்ரைகால்யே பேத ஹீநம் த்ரிபி: அஹம்அநிசம் யோக பேதை: பஜே த்வாம்பொருள்: குருவாயூரப்பா! நீயே மூன்று குணங்களின் மாறுபாடுகளுடன் கூடிய மூன்று உலகங்களையும் படைக்கிறாய். நீயே அ-உ-ம என்ற எழுத்துக்களால் ஆன ப்ரணவத்தின் பொருளாக உள்ளாய். மூன்று மூர்த்திகளின் சேர்க்கையான பொருள் நீயே. மூன்று வேதங்கள் புகழ்ந்து உன்னையே துதிக்கின்றன. மூன்று நிலைகளான விழிப்பு, கனவு, உறக்கம், அறிந்தவன் நீயே, மூன்று யுகங்களிலும் (த்ரேதா, துவாபர, கலி) நீயே தோன்றுகிறாய். மூன்று அடிகளால் மூன்று உலகையும் அளந்தாய். மூன்று காலங்களிலும் (கடந்த, நிகழ், எதிர்) மாறாமல் உள்ளாய். இப்படிப்பட்ட உன்னை நான் மூன்று யோகங்களால் (கர்ம, ஞான, பக்தி) வழிபடுகிறேன்.10. ஸத்யம் சுத்தம் விபுத்தம் ஜயதிதவ வபு: நித்ய முக்தம் நிரீஹம்நிர்த்வந்த்வம் நிர்விகாரம் நிகிலகுண கண வ்யஞ்ஜந ஆதாரபூதம்நிர்மூலம் நிர்மலம் தத் நிரவதிமஹிமா உல்லாஸி நிர்லீநம் அந்த:நிஸ்ஸங்காநாம் முநீநாம் நிருபம்பரம ஆநந்த ஸாந்த்ர ப்ரகாசம்பொருள்: குருவாயூரப்பா! உனது திருமேனி ஸத்யமாக உள்ளது; அறிவுடன் உள்ளது; வெற்றியுடன் உள்ளது; பந்தபாசம் அற்றது; விருப்பம் அற்றது; மாற்றம் அடையாதது; ஒப்புமை இல்லாதது; நற்குணங்களின் ஆதாரமாக உள்ளது; தான் தோன்றுவதற்கு வேறு எதனையும் காரணமாகக் கொண்டு இல்லாதது; களங்கம் அற்றது; பெருமைகள் எல்லையற்று உள்ளது; பற்று இல்லாத முனிவர்களின் மனதில் உள்ளது;  எல்லையில்லாத பரமானந்தம் உடையது- இப்படிப்பட்ட சிறப்புகள் உடையது.11. துர்வார த்வாதச ஆரம் த்ரி சதபரிமிலத் ஷஷ்டி பர்வ அபிவீதம்ஸம்ப்ராம்யத் க்ரூர வேகம் க்ஷணம்அநு ஜகத் ஆச்சித்ய ஸந்தௌ அமாநம்சக்ரம் தே காலரூபம் வ்யதயது நது மாம் த்வத் பத ஏக அவலம்பம்விஷ்ணோ காருண்ய ஸிந்தோ பவநபுரே பதே பாஹி ஸர்வ ஆமய ஓகாத்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விஷ்ணுவே! கருணைக்கடலே! உனது காலம் என்ற சக்கரம் பன்னிரண்டு ஆரங்களும் (மாதம்), முந்நூற்று அறுபது முனைகளையும் (நாட்கள்) உடையது. அது மிகவும் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. யாராலும் நிறுத்த இயலாத வேகம் உடையது. ஒவ்வொரு நொடியும் அது உலகத்தைத் தன்னுடன் வேகமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிறது. அப்படி ஓடும் அந்தச் சக்கரம், உனது திருவடிகளை வலுவாகப் பிடித்திருக்கும் என்னைத் துன்புறுத்த வேண்டாம். என்னை எனது பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !