உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

திருப்பூர் வஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

திருப்பூர்: நல்லூர், சென்னிமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த 21ம் தேதி  கணபதி பூஜையுடன் வஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது. தீர்த்தம், முளைப்பாலிகை அழைத்து வருதல், பூஜை நிகழ்வுகளை  தொடர்ந்து, நேற்று காலை 5:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கும்பங்கள் புறப்பாடு ஆகியன நடந்தது. அதன்பின், காலை  8:15 மணி முதல் 9:15 மணிக்குள் ஸ்ரீ வஞ்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, சிவராமகிருஷ்ண குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம்  நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !