உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை பிரசன்ன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

திருமழிசை பிரசன்ன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

திருமழிசை: திருமழிசையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில், நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த 25ம் தேதி,  காலை 7:30 மணிக்கு, மகா சங்கல்பமும், தீப பூஜையும் நடந்தது. தொடர்ந்து மகா கணபதி ஹோமமும், பாலாலய பிரசன்ன பூஜையும் நடந்தது. பின்,  இரவு 7:30 மணிக்கு, மகா கும்ப பூஜையும், இரவு 8:00 மணிக்கு, முதற்கால பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று,  காலை 6:30 மணிக்கு, கும்ப பூ ஜையும், அக்னி கார்யமும் நடந்தது. அதன்பின், 8:30 மணிக்கு, கடம் புறப்பாடும், காலை 8:45 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், அதை  தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு மகா கும்பாபிஷேகமும், விசேஷ தீபாராதனையும் நடந்தது. அதன்பின், நேற்று, இரவு 7:30 மணிக்கு, உற்சவர் பி ரசன்ன விநாயகர் மலர் அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !