சிங்கவரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3742 days ago
செஞ்சி : சிங்கவரம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, யாகா சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும், 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.