உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமாதேவியின் பொருள்!

பூமாதேவியின் பொருள்!

இந்த பூமியை இருப்பிட ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றனர் மக்கள். அந்த பூமி நாம் என்ன செய்தாலும் பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறது.  எனவே அதை ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டு, பூமாதேவி என்று பெயர் சூட்டியுள்ளனர். பூமாதேவிக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும், அவள் அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நன்மையே செய்கிறாள். தனக்கு துன்பமே செய்தவர்களுக்கும், நன்மை செய்பவள் இவள். பூமா என்றால் இவளைவிடப் பெரியவள் இல்லை என்பது பொருள். பொறுமையில் இவளை விடவும் வேறு பெரியவர் இல்லை என்பதால்தான், இப் பெயர் ஏற்பட்டது. லலிதா சஹஸ்ர நாமத்தில் அம்பிகைக்கு, பூமரூபா என்ற பெயர் சொல்லப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !