மேகபலீஸ்வரருக்கு பவுர்ணமி பூஜை
ADDED :3740 days ago
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அடுத்த புகளூர் மேகபலீஸ்வரர் கோவிலில், ஆவணி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள புகளூர் மேகபலீஸ்வரருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர், குங்குமம் உள்ளிட்ட பல் வகை வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் இரவு, 7.30 மணிக்கு பஞ்ச முக தீபாராதனை உட்பட மகா மங்கள தீபாராதனை செய்யப்பட்டது.
* வேலாயுதம்பாளையம், ஐயப்ப ஸ்வாமி கோவிலில் நடந்த பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, விநாயகர், முருகர், ஐயப்ப ஸ்வாமிக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டது.