இதம்பாடலில் கிருஷ்ண ஜெயந்தி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி
ADDED :3738 days ago
சாயல்குடி : சிக்கல் அருகே இதம்பாடலில் 25ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கடலில் புனித நீராடி கிருஷ்ணருக்கு காப்பு கட்டினர். தெருக்கள் தோறும் வேம்பு இலை காப்பு கட்டினர். உறி அடிப்பதற்கு ஏலம் விடப்பட்டது. ராஜலிங்கம் 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.