கிருஷ்ணருக்கு ஜாதகம் கணிக்கும் திருநாள்!
ADDED :3895 days ago
கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தி மிகப்பெரிய உற்சவம். இது தவிர, வட மாநிலங்களில் நந்தோற்ஸவம் என்னும் நிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. கிருஷ்ணன் பிறந்ததும், அவரது வளர்ப்புத் தந்தை நந்தகோபர், ஜாதகர்மம் எனப்படும் ஜாதகம் கணிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அன்று கோபியர்கள், மஞ்சள்பொடி, தைலம், தயிர், பால், நெய், தண்ணீர், வெண்ணெய் ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இப்போதும், இந்த நிகழ்ச்சி குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது.