உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புகழிமலை அடிவாரத்தில் வேம்பு, அரசு திருமண விழா

புகழிமலை அடிவாரத்தில் வேம்பு, அரசு திருமண விழா

வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரத்தில், சுயம்பு அரசு, வேம்புக்கு தெய்வீக திருமண விழா நடந்தது. வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்பிரமண்ய ஸ்வாமி கோவில் அடிவாரத்தில், அரச மரம், வேம்பு மரம் உள்ளது. அப்பகுதி பெண்கள் சார்பில், திருக்கல்யாண நிகழ்ச்சி மூன்றாம் ஆண்டாக நடந்தது. பூ, வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், புடவை, வேட்டி ஆகியவற்றை வேம்பு, அரசுக்கு சாற்றி திருமணம் செய்து வைத்தனர். பின், மஹா தீபாரதனை நடந்தது. சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, விழா குழுவினர் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !