உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழா: காப்பு கட்டுதல் நிகழ்ச்சி!

கிருஷ்ண ஜெயந்தி விழா: காப்பு கட்டுதல் நிகழ்ச்சி!

கீழக்கரை: திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட கொம்பூதி கிராமத்தில், 32 வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் கண்ணபிரானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் செப்.,5 ல் 108 பால்குட அபிஷேகமும், விளையாட்டுப்போட்டிகளும், ரத்ததான முகாமும், மதுரா யாதவர் சங்க கட்டட திறப்பு விழாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கொம்பூதி மதுரா யாதவர் சங்கத்தினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !