உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா!
ADDED :3732 days ago
உடுமலை: கிருஷ்ண ஜெயந்தி விழா, நேற்று உடுமலையில் கொண்டாடப்பட்டது. காட் சத்சங்கம் உடுமலை கிளை சார்பில், ராமய்யர் திருமண மண்டபத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, விழா துவங்கியது. பிற்பகல், 3:00 மணி வரை, ‘ஹரே ராமா நாம கீர்த்தனைகள் பாடப்பட்டது. பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், கிருஷ்ணர் சிலையை சுற்றி, கிருஷ்ண கீர்த்தனம் பாடியபடி கோலாட்டம் ஆடினர். தொடர்ந்து, குழந்தைகளின் நாட்டிய நாடகம் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தனர். மாலை வரை நடந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.