உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்து வரும் காளீஸ்வரர் கோவில் மண்டபம்!

சிதிலமடைந்து வரும் காளீஸ்வரர் கோவில் மண்டபம்!

உத்திரமேரூர்: சீட்டஞ்சேரியில், சிதிலமடைந்து வரும், காளீஸ்வரர் கோவில் மண்டபத்தை சீரமைத்து, பாதுகாக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட, சீட்டஞ்சேரி  கிராமத்தில், அற நிலைய துறை கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்த காளீஸ்வரர் கோவில் உள்ளது.   இக்கோவிலில், பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தேர் உள்ளிட்டவற்றை பாதுகாத்து வைக்கவும்  மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இம்மண்டபம், பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில், மண்டபத்தில் சமூக விரோத செயல்களில், குடிமகன்கள் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பழமையான இந்த மண்டபத்தை, புனரமைத்து பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !