உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.9.47 லட்சம் வருவாய்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.9.47 லட்சம் வருவாய்

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் மூலம், 9.47 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டது. பண்டிகை முடிந்த நிலையில், கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி, இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. ஆகஸ்ட், 19ம் தேதியில் நான்கு உண்டியல்களும், நேற்று சிறப்பு உண்டியல் உட்பட, 10 உண்டியல்களும் எண்ணப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சூரியநாராயணன், சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மகாவிஷ்ணு, கோவில் நிர்வாக அதிகாரி உமாதேவி, தலைமை எழுத்தர் பிரபு ஆகியோர் முன்னிலையில், ஜெய்ராம் கல்லூரி மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த முறை உண்டியல் எண்ணப்பட்ட போது கிடைத்த தொகையை விட தற்போது உண்டியல் வருவாயில், 2.15 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. மாரியம்மன் கோவில் பண்டிகை காரணமாக தற்போது உண்டியல் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து பண்டிகைகள் வரிசை கட்டுவதால், அடுத்த முறை உண்டியல் எண்ணும் நிலையில், வருவாய் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !