உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பான் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

பான் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

ஹலசூரு: ஹலசூரு பஜார் தெருவிலுள்ள, பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ண மந்திரில், கிருஷ்ணர் ஜெயந்தி 5.9.15 முதல், 12ம் தேதி வரை நடக்கிறது.இன்று காலை திருமஞ்சனம், வேத பாராயணம், சாதுமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் கருட ரதத்தில் கிருஷ்ணர் பவனி வருகிறார்.

அமைச்சர் ரோஷன் பெய்க், முன்னாள் கவுன்சிலர் சரவணா உட்பட பலர் பங்கேற்கின்றனர். 6.9.15 இரவு, கிருஷ்ண ஜனனம் திருமஞ்சனம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. 7ம் தேதி மாலை, திருவாதிரை திருமஞ்சனம் முதல், சுவாமி ராமானுஜர் சாத்துமுறை ஆரத்தி நடக்கிறது. வரும், 12ம் தேதி மாலை, ஸ்ரீநாத முனிகல் கான சபையின் கிருஷ்ணர் டோலோற்சவம் பஜனை நடக்கிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்குமாறு, தலைவர் ஏகமூர்த்தி ராமானுஜதாசன், பிரதான அர்ச்சகர் விஷ்ணுசுதன் பட்டர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !