உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படுநெல்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

படுநெல்லியில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

வாலாஜாபாத்: படுநெல்லி கிராமத்தில், கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி அளவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு, 7:30 மணி அளவில், புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, சருக்கு மரம் ஏறுதல்; உறியடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 10:00 மணி அளவில், மலர் அலங்காரத்தில் வீதியுஉலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !