சங்கராபுரத்தில் திவ்ய தேச பெருமாள் தரிசனம்!
ADDED :3727 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில், 108 திவ்ய தேச பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பொது மக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. கடலுõர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்த கஜேந்திர ராமானுஜதாசன் 108 திவ்ய தேச பெருமாள் சுவாமி சிலைகள் அலங்கரிக்ககப்பட்டு, சங்கராபுரம் தாகப்பிள்ளை திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சங்கராபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர், 108 திவ்ய தேச பெருமாளை குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.