வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :3727 days ago
ஊத்துக்கோட்டை: வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஊத்துக்கோட்டையில் அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. உற்சவர், கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், சிறுவர், சிறுமியர், கிருஷ்ணர் - ராதை வேடமிட்டு வந்தனர். தொடர்ந்து திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.