பாண்டுரங்கன் பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!
ADDED :3723 days ago
விழுப்புரம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, விழுப்புரத்தில் நடந்த விழாவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழுப்புரம் பாண்டுரங்கன் பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விழா நடந்தது. விழாவினையொட்டி சிறுவர், சிறுமிகள் பலர் கிருஷ்ணர், ராதா மாறு வேடமணிந்து, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும், ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.