புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் உறியடி உற்சவம்
ADDED :3723 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனை மடத்தில் வரும் 12ம் தேதி, உறியடி உற்வசம் நடக்கிறது. வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனை கூடத்தில், 7ம் ஆண்டு பிரதிஷ்டை தின மகோற்சவம் மற்றும் 52வது ஆண்டு ஜெயந்தி உறியடி விழா கடந்த 30ம் தேதி, மகா சுதர்சன தந்வந்திரி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி கோகுலஷ்டமி நடந்தது. 6ம் தேதி பிள்ளைத்தோட்டம் கண்ணபிரான் கோவில், நேற்று நவநீத கிருஷ்ணன் கோவிலில் நாமசங்கீர்த்தனம் நடந்தது. நாளை (9ம் தேதி) பரனுார் பக்த கோலாகலன் கருட சேவையில் பங்கேற்பதும், 12ம் தேதி உறியடி உற்சவம் நடக்கிறது.