உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்

சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை மேற்கு ரத வீதியிலுள்ள, ஸ்ரீ சித்தி முக்தி விநாயகர் கோயிலில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. நேற்றுமுன்தினம் வாஸ்து பூஜையுடன் துவங்கிய விழாவில், ஸ்ரீமத் கள்ளியடி பிரம்மா மடத்தில் இருந்து காவிரி தீர்த்தம் ஊர்வலமாக மங்கம்மாள் கேணி விநாயகர் கோயில் வழியே கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.நேற்று காலை கனி மூலிகை பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. உற்சவர் புறப்பாடாகி ரத வீதிகள் வழியே வலம் வந்தார். விழா ஏற்பாட்டினை ஸ்ரீ சித்தி முத்தி விநாயகர் சேவை அறக்கட்டளை மற்றும் சங்கடஹர சதுர்த்தி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !