உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு சீனிவாசர்!

நான்கு சீனிவாசர்!

நான்கு சீனிவாசர் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர், சீனிவாசர். உக்கிர சீனிவாசர் என்ற நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். மூலவரின் திருவடியில் இருப்பவர் போக சீனிவாசர். இவருக்கே பள்ளியறை பூஜை நடத்தப்படுகிறது. தினமும் பஞ்சாங்கம் கேட்பவர் கொலுவு சீனிவாசர். கோவிலின் பங்காரு வாசல் என்னும் தங்க வாசலின் முன் இவர் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு திருவிழா காலத்தில் எழுந்தருள்பவர் சீனிவாசர். இவரையே உற்சவர் சீனிவாசர் என்பர். உக்கிர சீனிவாசர் கார்த்திகை ஏகாதசியன்று மட்டும் சூரிய உதயத்திற்குள் பவனி வருவது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !