நல்வழி காட்டும் நவமொழி!
ADDED :3801 days ago
கோபத்தை விடுங்கள் - அது கல்லீரலுக்கு நல்லது.
தைரியமாக இருங்கள் - அது சிறுநீரகத்திற்கு சிறந்தது.
மகிழ்ச்சியுடன் இருங்கள் - அது இருதயத்துக்கு இதமானது.
அதிகாலையில் எழுங்கள் - அது சுறுசுறுப்புக்கு வழிகாட்டுகிறது.
வெளிச்சத்தில் படியுங்கள் - அது கண்களுக்கு நல்லது.
உடற்பயிற்சி செய்யுங்கள் - அது உடலுக்கு தெம்பளிக்கிறது
நல்லதை எண்ணுங்கள் - அது மனதுக்கு நல்லது.
நல்லதைத் தேடுங்கள் - அது அறிவை விருத்தியாக்குகிறது.
டிவி யை தவிருங்கள் - அது பார்வைக்கு நல்லது.