சிவப்பு சார்த்தி கோலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் உலா!
ADDED :3718 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் முருகப்பெருமான் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில் 7ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு சண்முகர் வள்ளி, தெய்வானையிடன், தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.