பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உறியடி உற்சவ விழா!
ADDED :3717 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தர ராஜ பெருமாள் கோயிலில் உறியடி உற்சவ விழா நடந்தது. இக்கோயிலின் சவுந்தரவல்லித் தாயார் சந்நதியில்,வேதாத் யயன சபை சார்பில் கிருஷ்ணயாகம் நடந்தது. முன்னதாக செப்., 5 மாலை 5 மணிக்கு புனித தீர்த்த குடங்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயி லை அடைந்தது. பின்னர் கிருஷ்ண சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு கோமாதா பூஜை, ஹோமம் நடந்தது. செப். 7 ல் காலை பூர்ணாகுதி நிறைவடைந்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தி இன்னிசை, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு சுந்தரராஜப் பெரு மாள் சேஷ வாகனத்தில், கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி வலம் வந்தார். அப்போது பெருமாள் கோயில், ராஷ்ட்ரபதி, காளிதாஸ் பள்ளி தெருவில் வெண்ணெய், தயிர், பால் மற்றும் உறியில் தேங்காய் கட்டி உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.