தசரா விழா: ரூ.89 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்!
மைசூரு: புகழ் பெற்ற தசரா உற்சவத்தின் முக்கிய அம்சமான, ஜம்பு சவாரியில் பங்கேற்கும் அர்ஜுனா தலைமையிலான யானைப் படைகள், பாகன், உதவியாளர்கள் மற்றும் யானைகளால் ஏற்படக்கூடிய சொத்து, உயிர் சேத நிவாரணத்துக்காக, 89 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.மைசூரு தசராவில், அர்ஜுனா தலைமையில், 12 யானைகள் பங்கேற்கவுள்ளன. இந்த யானைகளுக்கு, 35 லட்சம் ரூபாயும்; யானைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ள, 24 பாகன்கள், காவாடிகளுக்கு, 24 லட்சம் ரூபாயும்; யானைகளால் ஏற்படக்கூடிய சேதத்துக்கு, 30 லட்சம் ரூபாயும்; தங்க அம்பாரிக்கு, 15 கோடி ரூபாயும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.மைசூரு வன பாதுகாப்பு அதிகாரி கமலா கூறுகையில், ”தாரா உற்சவத்தை காண, உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவர். இந்த சந்தர்ப்பத்தில் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.